2 வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால், டாஸ் போடப்படாமல் முதல் நாள் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்தப் போட்டியை எதிர்பார்த்துக்கொண்டிருந்த இங்கிலாந்து மற்றும் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மூன்று முறை நடுவர்கள் மைதானத்துக்கு வந்து பார்வையிட்டனர். ஆனால், மழை விட்டு விட்டு பெய்துகொண்டே இருந்ததால் முதல் நாள் போட்டி கைவிடப்பட்டது.

இந்நிலையில் இன்று போட்டி தொடங்குகிறது. வழக்கமாக இந்திய நேரப்படி 3.30 மணிக்கு போட்டித் தொடங்கும். இன்றைய போட்டி அரை மணி நேரம் முன்னதாகத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நேரத்தில் இந்திய வீரர்களுக்கு கொடுக்கபட்ட உணவுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது!!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here