இந்திய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை துவங்க உள்ளது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் சார் குர்ரான் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பென் ஸ்டோக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி;

அலஸ்டைர் குக், 2. ஜென்னிங்ஸ், 3. ஜோ ரூட், 4. போப், 5. ஜோஸ் பட்லர், 6. பேர் ஸ்டோவ், 7. பென் ஸ்டோக்ஸ், 8. கிறிஸ் வோக்ஸ், 9 அடில் ரஷித், 10. ஜேம்ஸ் ஆண்டர்சன், 11. ஸ்டூவர்ட் பிராட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here