உலக கோப்பை போட்டி இங்கிலாந்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் போட்டியில் நியூஸிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் அரோன் ஃபின்ச் களமிறங்கினர். ஃபின்ச் 8 ரன்னிலே வெளியேறினார். இதன் பின் வார்னருடன் கவாஜா ஜோடி சேர்ந்தார். சற்று நேரத்திலே 16 ரன்களுடன் வார்னரும் விக்கெட் இழந்தார்.

இதன் பின் தொடர்ச்சியாக ஸ்மித் 5, ஸ்டோய்னிஸ் 21, மேக்ஸ்வெல் 1 ரன்னில் வெளியேறினர். இதன் பின் களமிறங்கிய அலெக்ஸ் கேரி உஸ்மன் கவாஜா உடன் ஜோடி சேரந்து அணியின் எண்ணிக்கையை உயய்த்தினர்.

இவர்களின் ஜோடியை பிரிக்க போராடியது நியூசீலாந்து அணி. அப்போது வில்லியம்சன் வீசிய பந்தில் அலெக்ஸ் கேரி 71 ரன்கள் குவித்து வெளியேறினார். பாட் கம்மின்ஸ் களமிறங்கினார். 49.3 ஓவரில் கவாஜா 88 ரன்கள் குவித்து போல்ட்டு ஆக இதன் பின் களமிறங்கிய ஸ்டார்க் அடுத்து பந்திலே இவரும் போல்டாகினர்.

இதன் பின் களமிறங்கிய பெஹ்ரெண்டோர்ஃப் அதற்கடுத்து பந்தில் எல்.பி.டப்யூ ஆனார். ட்ரெண்ட் போல்ட் தனது சிறப்பான பந்துவீச்சில் ஹாட்-டிர்க் விக்கெட் எடுத்துள்ளார். 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 243 ரன்கள் குவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here