உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இப்போட்டி பாஸ்டன் பர்மிங்காமில் எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து  50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் குவித்தது. பின்னர் இறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 306 ரன்கள் எடுத்து  31ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.

இந்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி கையில் பந்து பட்டு அவருக்கு காயம் ஏற்பட்டது. அதையும் கண்டுக்காமால் ஆடினார். ரத்தம் வந்ததை பார்த்து அவர் தனது வாயால் உறிஞ்சி, கீலே துப்பி, மீண்டும் களத்தில் இறங்கினார். தோனியின் இந்த செயலை கண்டு ரசிகர்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here