Carlos Brathwaite

நடப்பு உலகக்கோப்பையின் 34வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் மோதியது. இதில் இந்திய முதலில் களமிறங்கி 268 ரன்களை குவித்தனர். இதன் பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்தவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அனைத்து விக்கெட்களையும் இழந்து 143 ரன்கள் மட்டும் பெற்றது. இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பந்துவீசிய போது 42-வது ஓவரை வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் பிராத்வைட் வீசினார். அப்போது ஒரு பந்தை வைடு என நடுவர் தெரிவித்தார். இதனால் பிராத்வைட் கோபம் அடைந்து நடுவரை முறைத்தார். அவரது செயல் ஐசிசி விதிமுறைக்கு எதிராக இருந்ததால் அவருடைய சம்பளத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here