2019 உலகக்கோப்பை தொடரானது லீக் மற்றும் அரையிறுதி சுற்று என அனைத்தும் முடிவடைந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசீலாந்து அணிகள் மோதவுள்ளது. இங்கிலாந்து அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியும் நியூசீலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் தொடங்கவுள்ளது. இந்த இரு அணிகளும் உலகக்கோப்பையில் ஒருமுறை கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இன்றைய இறுதியில் ஒரு அணி வெற்றி பெற்று தனது முதல் உலகக்கோப்பை வெற்றியை பதிவு செய்ய காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here