2019 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. இந்த போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிஙை தேர்வு செய்தது. 49 ஓவரிலே அனைத்து விக்கெட்களையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 223 ரன்கள் குவித்தது. இதில் ஸ்டீவ் ஸ்மித் அடித்த 85 ரன்கள் அதிகபட்சமாக இருக்கிறது.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 32.1 ஓவரில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களான பேர்ஸ்டோவ் மற்றும் ஜேசன் ராய் சிறப்பாக விளையாடினர். இதில் ஜேசன் ராய் 85 ரன்கள் குவித்துள்ளார்.

16வது ஓவரில் ஜேசன் ராய் தொடர்ச்சியாக மூன்று சிக்ஸ்ர்களை விளாசினார். பாட் கம்மின்ஸ் வீசிய 20 ஓவரில் ஜேசன் ராய் விக்கெட் இழந்து நடுவரிடம் வாக்குவாதத்திற்கு உள்ளானார். கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவு பணியாளர்களுக்கான ஐசிசி நடத்தை விதிகளின் பிரிவு 2.8 ஐ மீறியதாக வலதுகை பேட்ஸ்மன் ஜேசன் ராய் மீது நிரூபிக்கப்பட்டது.

இந்த செயலுக்கு வருத்தம் தெறிவித்த பின்னர் ஜேசன் ராய்க்கு போட்டிக் கட்டணத்தில் 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இவருக்கு இரண்டு குறைபாடு புள்ளிகள் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே இவர் இறுதி போட்டியில் விளையாட தடைகள் ஏதும் விதிக்கபட வில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here