உலக கோப்பை போட்டி இன்னும் சில நாள்களில் நடைபெற உள்ளது.இந்நிலையில் நேற்று பயிற்சி போட்டி தொடங்கியது.இன்றைய பயிற்சி போட்டியில் இங்கிலாந்து Vs  ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றனர்.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

ஆட்டம் தொடக்கத்தில் பிஞ்ச் 14 ரன்னில் அவுட் ஆனார். ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 297 ரன்கள் எடுத்தனர்.இங்கிலாந்து அணியில் லியாம் பிளன்கெட் 4 விக்கெட்டை வீழ்த்தினார்.

இங்கிலாந்து அணி 298 ரன்கள் இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய், ஜானி பைர்ஸ்டோவ் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய ஜேசன் ராய் 32 ரன்னிலும்,ஜானி பைர்ஸ்டோவ் 12 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.பின்னர் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 20 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.

இங்கிலாந்து அணியில் தற்போது 27 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 159 ரன்கள் எடுத்து உள்ளது. களத்தில் ஜேம்ஸ் வின்ஸ் 43 ரன்னுடன் , ஜோஸ் பட்லெர் 46 ரன்னுடன் விளையாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here