இன்றைய 41 வது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசீலாந்து அணிகள் மோதுகிறது. இந்த போட்டி செஸ்டர் லீ ஸ்ட்ரீட் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களான ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் மற்றும் சதம் அடித்துள்ளனர். இதில் ஜேசன் ராய் 60 ரன்கள் மற்றும் பேர்ஸ்டோவ் 106 ரன்கள் குவித்துள்ளனர். இதன் பின் ரூட் (24), பட்லர் (11), இயோன் மோர்கன் (42), ஸ்டோக்ஸ் (11), கிறிஸ் வோக்ஸ் (4), பிளெங்கெட் (15), அதில் ரஷித் (16), ஆர்ச்சர் (1) ரன்கள் குவித்துள்ளார்கள். 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 305 ரன்கள் குவித்துள்ளனர்.

மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசீலாந்து அணி தொடக்கத்தில் இருந்தே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தொடக்க வீரர்களான குப்தில் 8 மற்றும் நிக்கோலஸ் 0 ரன்கள் பெற்று விக்கெட் இழக்க வில்லியம்சன் மற்றும் ரோஸ் டெய்லர் களமிறங்கினர். வில்லியம்சன் 27, ரோஸ் டெய்லர் 28 பெற்றுள்ளார்கள். இதன் பின் களமிறங்கிய லதாம் 57 ரன்கள், நிஷாம் 19 ரன்கள், சாண்ட்னர் 12 ரன்கள், கொலின் டி கிராந்தோம் 3 ரன்கள், சவுதி மற்றும் ஹென்றி 7 ரன்கள், போல்ட் 4 ரன்கள் பெற்றுள்ளனர். 45 ஓவர்கள் முடிவில் நியூசீலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து  186 ரன்கள் பெற்று தோல்வியை அடைந்தனர்.

இங்கிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் தனது வெற்றி கணக்கை உயர்த்தியுள்ளது. இங்கிலாந்து அண பவுலிங் மற்றும் பேட்டிங் இரண்டிலும் சிறப்பாக விளையாடியது. இதில் பேர்ஸ்டோவ் சதமும் போல்ட் மூன்று விக்கெட்டும் அணியின் வெற்றிக்கு மிக்கிய காரணமாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here