இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது .இந்நிலையில் நாட்டிங்காம் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று நான்காவது போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 340 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசாம்112 பந்தில் 13 பவுண்டரி, 1 சிக்ஸர் என 115 ரன்கள் குவித்தார்.

பின்னர் இறங்கிய இங்கிலாந்து அணி 49.3 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 341 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக  ஜேசன் ராய் 89 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்ஸர் என 114  ரன்கள் குவித்தனர்.

இதுவரை நடந்த 4 போட்டிகளில் இங்கிலாந்து அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது.5-வது ஒரு நாள் போட்டி வருகின்ற 19-ம் தேதி நடைபெற உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here