2019 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. இந்த போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிஙை தேர்வு செய்தது. 49 ஓவரிலே அனைத்து விக்கெட்களையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 223 ரன்கள் குவித்தது. இதில் ஸ்டீவ் ஸ்மித் அடித்த 85 ரன்கள் அதிகபட்சமாக இருக்கிறது.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 32.1 ஓவரில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். ஜேசன் ராய் 85 ரன்கள் குவித்திருந்தார். இப்போட்டியின் முதல் இன்னிஸ்சில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மற்றும் தொடக்க வீரரான ஆரோன் பின்ச் களமிறங்கிய முதல் பந்திலே ஆர்ச்சரிடம் lbw அவுட்டானார். எனவே, இவர் உலகக்கோப்பையின் அரையிறுதியில் டக் அவுட்டான முதல் கேப்டன் ஆனார்.

https://twitter.com/StarSportsIndia/status/1149665736366813184?s=09

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here