உலக கோப்பை போட்டிக்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது.உலககோப்பை திருவிழா வருகின்ற 30-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த திருவிழாவில் 10 அணிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்த உலக கோப்பை திருவிழாவிற்காக லட்சக்கணக்கான  ரசிகர்கள் 4 வருடங்களாக காத்து கொண்டு இருக்கின்றனர்.

உலக கோப்பை பயிற்சி போட்டி வருகின்ற 24-ம் தேதி தொடங்க உள்ளது.பயிற்சி போட்டியில் கலந்து கொள்வற்காக இந்திய அணி 22-ம் தேதி இங்கிலாந்திற்கு செல்ல உள்ளது.

முதல் பயிற்சி போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் மோத உள்ளது .இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலக கோப்பை போட்டிக்காக பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பாடல் “ஸ்டான்ட் பை”என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டு உள்ளது.

இப்பாடலை இங்கிலாந்து பாப் பாடகி லோரின் பாடி உள்ளார்.உலக கோப்பை கிரிக்கெட் தூதர் பிளிண்ட் டாப் இணைத்து இப்பாடலை உருவாக்கி உள்ளனர். இப்பாடல் வெளியான சிலமணி நேரத்தில் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here