45வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோதியது. இந்த போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தங்களது வெற்றியை பதிவு செய்தது தென்னாப்பிரிக்கா அணி. தென்னாப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரர்களான இம்ரான் தாகிர் மற்றும் ஜே பி டும்னி தங்களது கடைசி உலகக்கோப்பை தொடரில் விளையாடி வெற்றியுடன் தங்களது ஓய்வை பெற்றனர். நடப்பு உலகக்கோப்பையில் 9 போட்டிகள் விளையாடிய இம்ரான் தாகிர் மொத்தமாக 11 விக்கெட்களை பெற்றுள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்களை பெற்று ஆட்ட நாயகன் விருதை பெற்றிருந்தார். ஜே.பி. டும்னி நடப்பு உலகக்கோப்பையில் 4 போட்டிகளில் பங்கேற்று 70 ரன்கள் மட்டும் குவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here