நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணி விளையாடிய 8 லீக் போட்டியில் சிறப்பாக விளையாடி 7 போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியின் முதல் போட்டியில் இந்லிள அணியும் நியூசீலாந்து அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய நியூசீலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 211 ரன்கள் குவித்திருந்த போது மழை குறிக்கிட்டதால் போட்டி நிறத்தப்பட்டது. இதன் பின் ரிசர்வ் டே முறைப்படி அடுத்த நாள் போட்டி 46.2 ஓவரிலிருந்து தொடங்கியது. 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழந்து 239 ரன்கள் குவித்தனர்.

இதன் பின் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான கே.எல். ராகுல், ரோகித் சர்மா மற்றும் விராட் 1 ரன்கள் அடித்து தங்களது விக்கெட்களை இழந்தனர். இறுதியாக இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 221 ரன்கள் மட்டும் அடித்து தோல்வியை அடைந்தனர். இதில் ஜடேஜா 59 பந்தில் 77 ரன்கள் குவித்து நியூசீலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இப்போட்டியை கொல்கத்தாவை சேர்ந்த 33 வயதான ஸ்ரீகாந்த் மைதி என்பவர் தமது செல்போனில் பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது, தோனி ரன் அவுட் ஆனதும் அவர் தரையில் மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் செர்த்துள்ளனர். ஆனால், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here