பங்களாதேஷ் பந்துவீச்சில் 314 ரன்கள் குவித்தது இந்தியா !

0
681

இன்று நடைபெறும் போட்டியில்,இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய  அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை  தேர்வு செய்துள்ளார்.

முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கே.எல். ராகுல் மற்றும் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி பாட்னர்சிப்பில் சதம் விளாசினர். இதன் பிறகு ரோகித் சர்மா தனது 4வது சதத்தை நிறைவு செய்தார். கே.எல் ராகுல் 77 ரன்களிலும் ரோகித் சர்மா 104 ரன்களிலும் தனது விக்கெட்களை இழந்தனர்.

இதன் பின் களமிறங்கிய விராட் கோலி 7 ரன்னிலும் ரிஷாப் பண்ட் 104 ரன்னிலும் வெளியேறினர். ஹர்திக் பாண்டியா (0), தினேஷ் கார்த்திக் (8),  தோனி (35), புவனேஷ்வர் (2), ஷமி (2), பும்ரா (0) ரன்கள் குவித்தனர். இறுதியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 314 ரன்கள் குவித்துள்ளனர்.

இப்போட்டியில் முஸ்தாபிஸூர் ரஹ்மான் 10 ஓவர்கள் வீசி 59 ரன்கள் கொடுத்து  5 முக்கிய விக்கெட்களை பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here