உலக கோப்பை போட்டி வருகின்ற 30-ம்தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம்  பயிற்சி போட்டி தொடங்கியது.

நேற்றைய போட்டியில் இந்தியா Vs நியூசிலாந்து அணிகள் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.இந்திய அணி 39.3 ஓவரில் 10 விக்கெட்டை இழந்து 179 ரன்கள் சேர்த்தனர்.இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 54 ரன்களும்,ஹர்திக் பாண்டியா 30 ரன்களும் குவித்தனர்.

நியூசிலாந்து அணியில் ட்ரென்ட் போல்ட் 4 விக்கெட்டையும்,ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்டையும் வீழ்த்தினார்.180 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 37.1 ஓவரில்3 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணி தரப்பில் கேப்டன் கேன் வில்லியம்சன் 67 ரன்னும்,ராஸ் டெய்லர் 71 ரன்னும் குவித்து அவுட் ஆனார்கள்.இந்திய அணியில் ஜாஸ்ரிட் பும்ரா, ஹார்டிக் பாண்டியா,  சாஹல் ,ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here