உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இன்று நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் மோத உள்ளது.இந்த போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்ச்பஸ்டன் மைதானத்தில்  நடைபெற உள்ளது.

ஆனால் மைதானத்தில் இருந்த ஈரப்பதம் காரணமாக  1 மணி நேரத்திற்கு பிறகு டாஸ் போடப்பட்டது.இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

நியூசிலாந்து அணி வீரர்கள் விவரம்: மார்ட்டின் குப்டில், கொலின் மன்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ரோஸ் டெய்லர், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் நீஷாம், கொலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் இடம் பிடித்தனர்.

பாகிஸ்தான் அணி வீரர்கள் விவரம்: இமாம்-உல்-ஹக், ஃபக்கர் ஜமான், பாபர் ஆசாம், முகமது ஹபீஸ், ஹரிஸ் சோஹைல், சர்பராஸ் அகமது (கேப்டன் & விக்கெட் கீப்பர் ), இமாத் வாசிம், சதாப் கான், வஹாப் ரியாஸ், முகமது அமீர், ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் இடம் பிடித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here