Rashid khan - Afghanistan

2019 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்தாக கேப்டன் பதவியில் இருந்த அஸ்கர் ஆப்கானை தூக்கி விட்டு குல்படின் நயிபை கேப்டனாக நியமித்தனர். இதனால் பல சர்ச்சைகள் எழுந்தது. ரஷித் கான் மற்றும் பலர் எதிர்ப்பை தெறிவித்தனர்.இருப்பினும் நடப்பு உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி குல்பாதின் நயிப் தலைமையில் களமிறங்கியது.

ஆனால் குல்படின் நயிப் தலைமையில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 9 லீக் போட்டிகளிலும் தோல்வியை மட்டும் பெற்று எந்தொரு புள்ளிகளையும் பெறாமல் உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி பல சர்ச்சைகளுக்கு உள்ளானது.

இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம்  ஒரு நாள், டெஸ்ட், டி-20 என அனைத்து ஃபார்மட்களுக்கும் புதிய கேப்டனாக இளம் வீரரான ரஷித் கானையும் துணை கேப்டனாக அஸ்கர் ஆப்கானும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. ரஷித் கான் நடப்பு உலகக்கோப்பையில் பல விக்கெட்களையும் பல ரன்களையும் குவித்து சிறந்த நிலைமையில் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here