நேற்றைய  போட்டியில் இங்கிலாந்து அணியும் ,இந்திய அணியும் மோதியது .இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது .இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார் .

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து  50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் குவித்தது. பின்னர் இறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 306 ரன்கள் எடுத்து  31ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.

இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மனான ரோகித் சர்மா விராட் மற்றும் ரிஷப் பண்ட் இருவருடன் ஜோடி சேரந்து தனது சதத்தை நிறைவு செய்தார். ரோகித் நடப்பு உலகக்கோப்பையில் மூன்று சதங்களை குவித்துள்ளார். இதன் மூவம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சவுரவ் கங்குலியின் சாதனையை சமம் செய்து சாதனை படைத்துள்ளார். ரோகித் சர்மா மீதமுள்ள இரண்டு போட்டிகளில் மற்றொரு சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here