Shaheed afridi

உலகக்கோப்பையின் 43வது லீக் போட்டி பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதியது. இந்த போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில்  டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிஙை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 315 ரன்கள் குவித்தனர். இதன் பின் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 44.1 ஓவரிலே அனைத்து விக்கெட்களையும் இழந்து 221 ரன்கள் குவித்து தோல்வி அடைந்தனர். பாகிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணியின் இளம் வீரரான ஷாஹீன் அப்ரிடி 6 விக்கெட்களை பெற்று சாதனை படைத்துள்ளார். தமீம் இக்பால், ஷாகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா, லிட்டன் தாஸ், முகமது சைபுதீன், முஸ்தாபிஸூர் ரஹ்மான் ஆகியோரின் முக்கிய விக்கெட்களை பறித்துள்ளார். இவர் 9.1 ஓவர்கள் வீசி 35 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்களை பெற்றுள்ளார்.இந்த உலகக்கோப்பையில் 6 விக்கெட் பெற்ற முதல் வீரராக திகழ்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here