2019 உலகக் கோப்பை தொடர் கடந்த மே மாதம் 30ஆம் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறுகிறது. இந்த உலகக் கோப்பையில் 45 லீக் போட்டிகளில் 30 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் என்று பார்த்தால் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகளுக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதையடுத்து இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளில் இருந்து ஒரு அணி இடம் பெறும் என்று எதிர்பாக்கலாம். மீதமுள்ள பங்களாதேஷ், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளின் அடுத்து வரும் போட்டிகளின் வெற்றி – தோல்விகளை பொறுத்து நிலை தெரியவரும். ஆனால் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் லீக் போட்டியுடன் வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here