ஐபிஎல் இறுதி போட்டியில் மும்பை அணியும்-சென்னை அணியும் மோதினர். அப்போட்டியில் முழங்காலில் அடிபட்டு ரத்தம் சொட்ட சொட்ட விளையாடிய வாட்சனுக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.

இந்நிலையில் வாட்சன் கடந்த சில நாட்களாக தனக்கு பாராட்டுகளையும் அன்பையும் வெளிப்படுத்தும் அனைத்து ரசிகர்களுக்கும் தனது இன்ஸ்டாகிராமில் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அந்த வீடியோவில் வாட்சன் ,ஐபிஎல் இறுதி போட்டியில் வெற்றி  கோட்டிற்கு அருகில் சென்று தோல்வி அடைந்தது அருமையான போட்டியாக அமைந்தது.மேலும் அடுத்த சீசனில் எனது பங்களிப்பை ஒரு படி அதிகமாக இருக்கும். என நம்பிக்கை உடன் காத்திருக்கிறேன் .இறுதியாக “விசில்போடு”என முடித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here