2019 உலகக்கோப்பையின் லீக் மற்றும் அரையிறுதி சுற்றுகள் சிறப்பாக முடிவடைந்துள்ளது. அரையிறுதியில் நியூசீலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணி அளிவில் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பையில் அனைத்து அணி வீரர்களும் தனது திறமைகளை வெளிக்கொண்டு பல சாதனைகளை புரிந்துள்ளனர். ஆஸ்திரேலியா அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் நடப்பு உலகக்கோப்பையில் தனது பவுலிங்கில் பல சாதனைகளை முறியடித்துள்ளார். இவர் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் குறைந்தது ஒரு விக்கெட் பெற்றிருந்தார். அந்தவகையில் ஸ்டார்க் நடப்பு உலகக்கோப்பையில் இரண்டு முறை 5 விக்கெட்களையும் இரண்டு முறை 4 விக்கெட்களையும் பெற்றுள்ளார்.

இவர் மொத்தம் 27 விக்கெட்களை பெற்று உலகக்கோப்பையில் அதிக விக்கெட்களை பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக முஸ்தாபீகுர் ரஹ்மான், ஜோப்ரா ஆர்ச்சர், முகமது அமீர் உள்ளனர். இதற்கு முன்னர் 2007ல் கிளென் மேக்ரத் 26 விக்கெட்களை பெற்றதே முதலிட்டத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here