இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற இருக்கிறது.

வழக்கமாக, பகலிரவு டெஸ்ட் போட்டிகள் 2 மணிக்கு துவங்கி 9 மணி வரை நடைபெறும். ஆனால் கொல்கத்தாவில் 8 மணிக்கு மேல் பனிப்பொழிவு உச்சத்தை பெறும் என்பதால் போட்டியை ஒரு மணி நேரம் முன்னதாக துவங்கி ஒரு மணி முதல் 8 மணி வரை நடத்த பெங்கால் கிரிக்கெட் வாரியம் பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்தது.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ தரப்பு, போட்டி ஒரு மணிக்கு துவங்கி 8 மணி வரை நடைபெறும் வரையில் திட்டமிடப்பட்டிருக்கிறது. முதல் சேஷன் ஒரு மணி முதல் 3 மணி வரை நடைபெறும். பின்னர் 40 நிமிடம் இடைவேளை. 2வது சேஷன் 3.40 முதல் 5.40 வரை நடைபெறும். பின்னர் 20 நிமிடம் இடைவேளை. இறுதியாக, 6 மணி முதல் 8 மணி வரை 3வது சேஷன் நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here