வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை முடித்துவிட்டு, ராஜஸ்தான் அணிக்காக சையது முஷ்டாக் அலி டிராபி தொடரில் ஆடி வருகிறார் தீபக் சகார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் விதர்பா இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சில் தடுமாறியது.

இப்போட்டியில் 13வது ஓவரை வீசிய தீபக் சகார் 4-வது, 5-வது மற்றும் 6-வது பந்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். இவர் வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

மூன்று நாட்களில் தற்போது இரண்டாவது முறையாக ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்ததால் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here