12-வது உலக கோப்பை வருகின்ற 30தேதி துவங்க உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ளும் 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்களின் பட்டியலை அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில் இரண்டாவது விக்கெட்டை கீப்பராக 21 வயது இளம் வீரர் ரிஷாப் பான்டுக்கு பதில் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது சர்ச்சையானது.

மேலும் பல முன்னாள்வீரர்கள் ரிஷாப் பான்டுவிற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கூறினார். ஆனால் தேர்வு குழு தலைவர் எம்.கே.எஸ்பிரசாத் கூறுகையில் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்ததாக கூறினார்.

இதற்கு அமைதியாக இருந்த விராட் தற்போது விளக்கம் அளித்து உள்ளார். விராட் கூறுகையில், ரிஷாப் பான்டுக்கு பதில் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் அனுபவம். மேலும் நெருக்கடியான சூழ்நிலையில் திறமையாக பேட்டிங் செய்வார்.

ஒருவேலை போட்டியின் போது தோனிக்கு காயம் ஏற்பட்டால் விக்கெட்டை கீப்பர் பணியை தினேஷ் கார்த்திக்கால் நன்றாக கவனிக்க முடியும். அதனால் தான் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது என கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here