இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் வீரர் தினேஷ் மோங்கியா. 1995-1996-ம் ஆண்டு பஞ்சாப் அணியில் அறிமுகமானார். பின்னர் 2000-2001-ம் ஆண்டு வரை உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார்.

பிறகு 2003-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றார்.இவர் கடைசியாக கடந்த 2007 ஐ.சி.எல்லில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார்.ஐசிஎல் தொடர்புடைய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ தடைவிதித்தது.

தினேஷ் மோங்கியா இந்திய அணிக்காக 57 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார். ஆனால் மோங்கியா  ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடவில்லை. 121 முதல் தர போட்டிகளில் விளையாடி 21 சதங்கள் விளாசி உள்ளார்.இந்நிலையில்  தினேஷ் மோங்கியா அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here