சீனாவிலுள்ள ஷாங்காய் நகரில் நடைபெற்றுவரும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில், முதலில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் பிரபல டென்னிஸ் வீரர் பெடரர் தோல்வி அடைந்து வெளியேறினார்.

இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் கிரீஸ் வீரர் ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ்சை எதிர்கொண்ட உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீரரான ஜோகோவிச், முதல் சட்டை 6-3 என கைப்பற்றி முன்னிலை பெற்றார். அடுத்த இரண்டு சுற்றுகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய கிரீஸ் வீரர் 7-5 மற்றும் 6-3 அடுத்தடுத்து இரண்டு செட்டுகளை கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.

உலகின் நம்பர் ஒன் வீரர் காலிறுதி சுற்றில் வெளியேறியதால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here