தரவரிசை பட்டியலில் முதல் எட்டு இடங்களில் இருக்கும் டென்னிஸ் வீரர்களுக்கான ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் இங்கிலாந்து தலைநகரான லண்டனில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் செர்பிய வீரர் ஜோகோவிச் – ஆஸ்திரிய வீரர் டாமினிக் தீம் இருவரும் பலப்பரிட்சை மேற்கொண்டனர். இதில் முதல் செட்டை ஜோகோவிச் 7-6 என போராடி கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டை முழுமையாக ஆதிக்கம் செலுத்தி தீம் 6-3 என கைப்பற்றினார். மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் இருவருக்கும் இடையே அனல் பறந்த ஆட்டத்தில் இறுதியாக தீம் 7-6 என வென்று, போட்டியையும் வென்றார்.

முன்னணி வீரர்களான ஜோகோவிச் நடால் மற்றும் ஃபெடரர் ஆகியோர் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருவதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here