ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது.

நவம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் – சிட்னி தண்டர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே, ஏதோ ஒரு ஆர்வத்தில் ஹரிகேன்ஸ் அணியைச் சேர்ந்த ஆஸ்திரேலியா வீராங்கனை எமிலி ஸ்மித் தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் அன்றைய போட்டியில் ஆடும் 11 வீரர்களின் பட்டியலை பகிர்ந்தார்.

இது ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டின் ஊழல் தடுப்பு பிரிவிற்கு எதிரானது என்று ஓராண்டு வீரங்கனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் பிக் பாஷ் லீக், அதனைத் தொடர்ந்து பெண்களுக்கான தேசிய கிரிக்கெட் லீக்கிலும் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here