இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது .இந்நிலையில் பிரிஸ்டல் உள்ள கவுண்டி மைதானத்தில் நேற்று முன்தினம் மூன்றாவது போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து  358 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் அணியில் இமாம்-உல்-ஹக் 131 பந்தில் 16 பவுண்டரி, 1 சிக்ஸர் என 151 ரன்கள் குவித்தார்.

பின்னர் இறங்கிய இங்கிலாந்து அணி 44.5 ஓவர் முடிவில்  4 விக்கெட்டை இழந்து 359 ரன்கள் எடுத்து.6 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோவ் 93 பந்தில் 15 பவுண்டரி,5 சிக்ஸர் என 128 ரன்களும் , ஜேசன் ராய் 55 பந்தில் 8 பவுண்டரி ,4 சிக்ஸர் என 76 ரன்கள்  குவித்தனர்.

மோயீன் அலி 46 ரன்களும் , கேப்டன் ஈயோன் மோர்கன் 17 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றனர்.

இதுவரை நடந்த 3 போட்டிகளில் 2 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.முதல் ஒரு நாள் போட்டியில் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here