உலகக் கோப்பை போட்டியில் 27வது லீக் போட்டியில், இங்கிலாந்து அணியும் இலங்கை அணியும் லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிஙை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தால் இலங்கை அணி இங்கிலாந்து அணியிடம் திணறியது. இதன் பின் களமிறங்கிய ஃபெர்னாடோ, குசல் மெண்டிஸ் மற்றும் மேத்யூஸ் சிறப்பாக விளையாடியதால் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழந்து 232 ரன்கள் எடுத்து.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களின் விக்கெட்களை முதல் 30 பந்துகளிலே விக்கெட் எடுத்து இங்கிலாந்து அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது இலங்கை அணி. தற்போது பத்து ஓவர்கள் முடிவில் 32 ரன்களை பெற்றுள்ளது. மோர்கன் மற்றும் ரூட் களத்தில் விளையாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here