இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனையான சாரா டைலர், இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

30 வயதாகும் இவர், 2006 ஆம் ஆண்டில் தனது ஆம் 17 வயதில் இங்கிலாந்து கிரிக்கெட்டில் அறிமுகமானார். மேலும், 226 போட்டிகளில் பங்கேற்றார். 6,533 சர்வதேச ரன்களைக் கொண்ட இங்கிலாந்து மகளிர் ஆல்-டைம் ரன் அடித்தவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

இந்நிலையில், இன்று முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாகாக கூறினார். திடீரென வெளியிட்ட இந்த அறிவிப்பு, ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், சற்று நாளுக்கு முன், இவர் நிர்வாணத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here