நேற்றைய உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இப்போட்டி பாஸ்டன் பர்மிங்காமில் எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களான ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் இந்திய அணியின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்தனர். இதில் ஜேசன் ராய் 66 ரன்களும் பேர்ஸ்டோவ் 111 ரன்களையும் குவித்தனர்.இதன் பின் களமிறங்கிய ஜோ ரூட் 44 ரன்கள், இயோன் மோர்கன் 1 ரன், ஜோஸ் பட்லர் 20 ரன்கள், கிறிஸ் வோக்ஸ் 7 ரன்கள், ஸ்டோக்ஸ் 79 ரன்கள் பெற்றுள்ளனர். 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்களை இழந்து 337 ரன்கள் குவித்துள்ளனர்.
மிகப்பெரிய இலக்கை நோக்கி சென்ற இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 306 ரன்கள் மட்டும் பெற்று தோல்வியை தழுவினர். இதில் ரோகித் சர்மா 102 ரன்கள் மற்றும் விராட் கோலி 66 ரன்கள் பெற்றுள்ளனர். இந்த போட்டியிலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இங்கிலாந்து அணியின் முக்கிய விக்கெட்களான பேர்ஸ்டோவ், ரூட், மோர்கன், பட்லர் மற்றும் கிறஸ் வோக்ஸ் ஆகயோரின் விக்கெட்களை பெற்றுள்ளார்