2008 -ம் ஆண்டு பேடி அப்டேன் இந்திய அணியின் பயிற்சி ஆலோசகராக நியமிக்கப் பட்டார். இவர் பயிற்சி ஆலோசகராக இருந்த போது தான்2011-ம் ஆண்டு ஒருநாள் உலககோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும் இந்திய அணி சர்வதேச தரவரிசையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் முதலிடத்தை பிடித்தது.

இந்நிலையில் தோனி கேப்டனாக இருந்த போது  ஓய்வு அறையில் தோனி விவாதம் மற்றும் பயிற்சியின் போது பல கட்டுப்பாடுகளை பின்பற்றுவர் என பேடி அப்டேன் கூறினார். மேலும் கூறுகையில்,பயிற்சி ஆலோசகராக இருந்த போது ஒருநாள் போட்டிக்கு தோனி கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிகளுக்கு அணில் கும்ளே கேப்டனாகவும் இருந்தனர்.

அணியை வழிநடத்த பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடித்தோம்.பயிற்சி மற்றும் ஆலோசனை நேரங்களில் தாமதமாக வரும் வீரர்களுக்கு ரூ.10000 அபராதம் என அணில் கும்ளே கூறினார்.

ஆனால் தோனி அதற்க்கு ஒரு படி மேலாக ஒரு வீரர் தாமதமாக வந்தால் அணியில் உள்ள அனைவரும் ரூ.10000 விதிக்க வேண்டும் எனகூறினார். அவர் கூறிய பிறகு ஒருவர் கூட தாமதமாக வரவில்லை என கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here