கால்பந்து உலகில் வருடத்திற்கு இருமுறை நடக்கும் சம்மர் வின்டர் வீரர்கள் அணி மாற்றம் எப்போதும் பரபரப்பாக பேசப்படும். அதுபோல் இம்முறை சம்மரில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி பேசப்பட்ட ஒன்று, ரொனால்டோ 9 வருடமாக இருந்த ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் கிளப் விட்டு வெளியேறி இத்தாலி கிளப்பான ஜுவென்டஸ் அணிக்கு 113 மில்லியன் யூரோவிற்கு சென்றது தான்.

அவர் சென்றவுடன் கணிசமாக அவரது ரசிகர்களும் ஜுவென்டஸ் கிளப் பக்கம் தாவினர். அவர் சென்ற பிறகு ரியல் மாட்ரிட் அணி எதிகொண்ட முதல் பெரிய கோப்பையான ஐரோப்பா சூப்பர் கோப்பை போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் அணியிடம் 2-4 என தோல்வியை தழுவியது.

ரொனால்டோ, இன்று ஜுவென்டஸ் அணிக்காக முதல் லீக் போட்டியை ஆட இருக்கிறார். ஜுவென்டஸ் அணி சக லீக் அணியான சீவோ அணியை எதிர்கொள்கிறது. போட்டி இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு துவங்க இருக்கிறது.

ரொனால்டோ வரவு எப்படி அமையப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here