இந்தியா, சீனா அணிகள் 21 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் மோதவுள்ளன.

ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) ஆசிய கோப்பை கால்பந்து (2019, ஜன. 5 – பிப். 1) தொடர் நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் விதமாக உலக தரவரிசையில் 97வது இடத்தில் உள்ள இந்திய அணி, உலகின் ‘நம்பர்–75’ சீனாவுடன் நட்பு ரீதியிலான சர்வதேச போட்டியில் விளையாட உள்ளது. இதற்கு இரு அணிகளின் கால்பந்து கூட்டமைப்புகள் சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் 21 ஆண்டுகளுக்கு பின், முதன்முறையாக இவ்விரு அணிகள் விளையாட உள்ளன. கடைசியாக கடந்த 1997ல் கொச்சியில் (கேரளா) நடந்த நேரு கோப்பையில் இவ்விரு அணிகள் மோதின.

எங்கு…. எப்போது

இந்தியா, சீனா அணிகள் இதுவரை 17 முறை மோதின. இதில் சீனா 12ல் வென்றது. ஐந்து போட்டிகள் ‘டிரா’ ஆனது.

அனைத்து போட்டிகளும் இந்திய மண்ணில் நடந்தன. முதன்முறையாக சுனில் செத்ரி  தலைமையிலான இந்திய அணி, பீஜிங் சென்று சீனாவுடன் விளையாட உள்ளது. தவிர, இந்திய அணி ஒரு முறை கூட சீனாவை வென்றதில்லை. இப்போட்டி வரும் அக்., 8–16ல் ஏதாவது ஒருநாள் நடக்க வாய்ப்பு உள்ளது. அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) வரும் அக்., 13ல் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இப்போட்டிக்கு பின் இந்திய அணி, உலக தரவரிசையில் 67வது இடத்தில் உள்ள சவுதி அரேபியாவுடன் சர்வதேச நட்பு போட்டியில் மோத உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here