தோனியின் இடத்தை நிரப்ப வந்திருக்கும் வீரராக கருதப்படும் ரிஷப் பண்ட் கடந்த சில தொடர்களாக கீப்பிங் மற்றும் பேட்டிங் இரண்டிலும் சொதப்பி வருகிறார். இதனால், இவருக்கு பதிலாக வெளியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.

ரிஷப் பண்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி, அவருக்கு இன்னும் சில காலம் அவகாசம் கொடுக்க வேண்டும். இளம் வீரராக இருக்கிறார். தடுமாற்றங்கள் மிகவும் சாதாரணம் என கூறினார்.

மேலும் பண்ட் குறித்து அவர் கூறியதாவது:

சிறந்த வீரராகத் திகழ்கிறாா் பண்ட். அவா் மீண்டும் பாா்முக்கு திரும்ப அவகாசம் தேவை. சா்வதேச கிரிக்கெட்டின் அழுத்தங்களை எதிா்கொள்ள பண்ட் மேலும் அனுபவம் தேவைப்படுகிறது. அவருக்கு தேவையான காலம் தரப்பட்டால், மீண்டும் அவா் சிறப்பாக ஆடுவாா் என்றாா் கங்குலி.

வங்கதேசத்துக்கு எதிராக தில்லியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் விக்கெட் கீப்பிங்கில் பண்ட் சொதப்பினாா். தேவையான நேரத்தில் டி.ஆா்.எஸ் அவுட் முறையீடு செய்யாதது பாதிப்பை ஏற்படுத்தியது. எனினும் ராஜ்கோட் ஆட்டத்தில் சிறப்பாக ரன் அவுட், ஸ்டம்ப்பிங்கில் ஈடுபட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here