நியூசிலாந்து ஆக்கி அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியா–நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது.

நியூசிலாந்து ஆக்கி அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியா–நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4–2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இந்திய அணியில் ரூபிந்தர் பால்சிங் 2–வது மற்றும் 34–வது நிமிடத்திலும், மன்தீப்சிங் 15–வது நிமிடத்திலும், ஹர்மன்பிரீத் சிங் 38–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் ஸ்டீபன்ஸ் ஜென்னெஸ் 26–வது மற்றும் 55–வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here