ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சூப்பர் ஓவர் சமன் ஆனபிறகு பவுண்டரிகளை கணக்கிடும் விதி மூலம் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

“உலக சாம்பியனை நிர்ணயிக்கும் போட்டியில் இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான விதிகளை யார் வைத்தது?” என ஐசிசி விதிகளை ரசிகர்கள் பெரிதும் சாடினார்.

இதை பரிசீலித்த ஐசிசி நிர்வாகம், விரைவில் இந்த விதிகளை பரிசீலனை செய்து மாற்று விதிகள் அறிவிக்கப்படும் என தெரிவித்தது. இந்நிலையில் இதற்கான மாற்று வழியை தற்போது ஐசிசி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஐசிசி இன்று வெளியிட்ட அறிக்கையில், சூப்பர் ஓவர் சமன் ஆனால், ஏதேனும் ஒரு அணி அதிக ரன்கள் பெறும் வரை மீண்டும் மீண்டும் சூப்பர் ஓவரே நடக்கும் என அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here