ஸ்லாந்தில் நடைபெற்ற வாள்வீச்சுப் தொடரில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை பவானி தேவி வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

ஸ்லாந்து நாட்டில் நடைபெற்று முடிந்த டூர்னோய் சாட்டி லைட் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இந்தியாவை சேர்ந்த பவானிதேவி முன்னேறினார். அரையிறுதியில் அமெரிக்காவின் பிரான்செஸ்கோ ரூசோவை எதிர்கொண்டார். இதில் ரூசோ 15-13 என்ற கணக்கில் பவானிதேவியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றார்.

இதனால், பவானி தேவிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இறுதியில், அமெரிக்காவின் மய்யா சாம்பர்லைன் தங்கம் வென்றார். அமெரிக்காவை சேர்ந்த மற்றுமொரு வீராங்கனை ரூசோ வெள்ளி பதக்கம் வென்றார்.

கடந்த வாரம் பெல்ஜியத்தில் நடைபெற்ற டூர்னோய் சாட்டிலைட் வாள்வீச்சுப் போட்டியில் பவானி தேவி வெள்ளி பதக்கம் கைப்பற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here