சமீபத்தில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து, அடுத்த ஆண்டு முதல் 100 பந்து கொண்ட கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.இந்த தொடரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அடுத்த வருடம் ஜூலை மாதம் அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த தொடரில் வீரர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி வீரர்களான ஸ்மித் , வார்னர் ஆகிய இருவருக்கும்  இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே 15 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தொடரில் கிறிஸ் கெயில் , மலிங்கா , ரபாடா ஆகியோருக்கும்  இதே விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த தொடருக்கான  ஏலம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here