இந்தியா , தென்னாபிரிக்கா இடையே மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினதில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் தொடங்கியது.

இந்த போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வால்-ரோஹித் சர்மா களமிறங்கினர். தொடக்கம் முதலே மிக சிறப்பாக ஆடி வந்த அவர்கள், பந்துவீச்சாளர்கள் மற்றும் பில்டர்களை ஓட விட்டனர். முதல் ஆட்ட நேர முடிவில் எந்த ஒரு விக்கெட் இழப்புமின்றி, 202 ரன்கள் அடித்தது.

Image result for mayank and rohit

நீண்ட போராட்டத்திற்கு பிறகு, 81.6 ஆம் ஒவரில் 176 ரன்களுடன் ரோஹித் சர்மா வெளியேறினார். அவரை அடுத்து களமிறங்கிய புஜாரா, 6 ரன்களுடன் வெளியேற, கேப்டன் விராட் கோலி 20 ரன்களில் வெளியேறினார். இவரை தொடர்ந்து, அணியை ஸ்கோரை உயர்த்தி வந்த மயங்க் அகர்வால், 215 ரன்கள் அடித்து வெளியேறினார்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரங்களில் வெளியேற, இந்திய அணி 502 ரன்களுக்கு டிக்ளர் செய்தது. இதில் இந்திய அணியில் அதிபட்சமாக மயங்க் அகர்வால் 225 ரன்கள் அடித்தார். தென்னாபிரிக்கா அணியில், கேஷவ் மகாராஜ் தலா மூன்று விக்கெட்டை வீழ்த்தினார்.

Image result for கேஷவ் மகாராஜ்

503 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி விளையாண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here