இன்றைய உலகக்கோப்பை தொடரில் 2 லீக் போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்திய அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள தி ரோஸ் பவுல், மைதானத்தில் நடைபெற உள்ளது.டாஸ் வென்ற இந்திய அணி முதலில் களமிறங்க முடிவு தேர்வு செய்தது.

இந்திய அணியின் தொடக்க வீரரான லோகேஷ் ராகுல், ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா 1 ரன்னில் ராகுல் 30 ரன்னில் வெளியேறினார். இலன் பின் களமிறங்கிய விராட் கோலி மற்றும் விஜய் சங்கர் நிதானமாக விளையாட தொடங்கினர். ஆனால் விஜய் சங்கர்  29  ரன்களில் ரஹ்மட் வீசிய பந்தில் வெளியேற தோனி களமிறங்கினார்.

இன்று தோனி தனது ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நினைக்கயில் 28 ரன்களில் விக்கெட் இழந்தார். இதன் விராட் மற்றும் கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்து தனது அரைசதத்தை நிறைவு செய்தனர். விராட் 67 ரன்னிலும் கேதர் 52 ரன்னிலும் வெளியேறினார். இதன் பின் களமிறங்கிய பவுலர்கள் அனைவரும் 1 ரன்னிலே விக்கெட் இழந்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 224 ரன்கள் மட்டும் பெற்று 8 விக்கெட்களை இழந்தது.

இதன் பின் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஹஸ்ரத்துல்லா ஸாசாய் 10 ரன்கள் மற்றும் குல்படின் நைப் 27 ரன்னகள் அடித்து வெளியேற ரஹ்மட் ஷா மற்றும் ஹஷ்மதுல்லா ஷாஹிடி களமிறங்கினர். இவர்களும் தனது ஜோடியில் 50 ரன்கள் அடித்து வெளியேறினர்.

இதன் பின் முகமது நபி மட்டும் 52 ரன்கள் அடித்துள்ளார். இக்ரம் அலி கில் (7), நஜிபுல்லா ஸத்ரான் (21), ரஷீத் கான்(0), அப்தாப் ஆலம்(0) முஜீப் உர் ரஹ்மான்(0) ரன்கள் அடித்து தனது விக்கெட் இழந்தனர். இதிலும் கடைசி ஓவரை வீசிய முகமது ஷமி தொடர்ச்சியாக மூன்று விக்கெட்களை பெற்றார். இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 213 ரன்கள் அடித்துள்ளனர். இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இதில் முகமது ஷமி 4 விக்கெட்களை பெற்றுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here