நடப்பு உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணியாக ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசீலாந்து அணிகள் திகழ்கிறது. இதன் பின் நான்காவது இடத்திற்கு பாங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாஸிட் அலி பாகிஸ்தான் அணியை வெளியேற்ற இந்திய அணி வேண்டுமென்றே தோல்வி அடையும் என்றார். இதுக்குறித்து விளக்கமளித்த பாஸிட்  தென்னாப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அடுத்து வரும் ஆப்கான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றால் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதிபெறும்.

இங்கிலாந்து, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றால் அது பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக முடியும். ஆனால் இந்திய அணி வேண்டுமென்றே தோற்று பாகிஸ்தான் அணிக்கு சிக்கலை உண்டாக்கும் என்றார் பாஸிட் அலி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here