2019வது உலகக்கோப்பையில் இந்திய அணி விளையாடிய லீக் போட்டியில் ஒரு தோல்வி மட்டும் அடைந்து புள்ளிபட்டியலில் முதலிடத்தில் இருந்தது. அதுமட்டுமின்றி 2019 உலகக்கோப்பையை வெல்லும் அணியாக கருதப்பட்டது. அரையிறுதியில் நியூசீலாந்து அணியை எதிர் கொண்ட இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உலகக்கோப்பை விட்டு வெளியேறினர்.

இந்த அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களான கே.எல் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகிய மூவரும் 1 ரன் மட்டும் அடித்து விக்கெட் இழந்து அணியின் நிலைமையை கவலைக்கிடமாக மாற்றினர். இதன் பின் களமிறங்கிய மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெள்யேற தோனி மற்றும் ஜடேஜா பாட்னர்சிப் போட்டு அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். தோனியை மட்டும் நம்பிக்கொண்டிருந்த நிலையில் தோனி ரன்னவுடாக இதன் பின் பவுலர்கள் விக்கெட்களை இழந்து தோல்வி அடைந்தனர்.

இதனால் ரசிகர்கள் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிக்க வேண்டும் என்று இணையதளத்தில் தங்களது கருத்துக்களை தெறிவித்து வந்தனர். இதுக்குறித்து முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெற்வித்து வந்தனர். அநிதவகையில் இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் வீரரான வாசிம் ஜாபர் ” இந்திய ஒருநாள் அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ரோஹித் சர்மாவிடம் ஒப்படைக்கும் நேரம் வந்துவிட்டதா…2023 உலகக்கோப்பையில்  ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்த நான் வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here