இன்றைய உலகக்கோப்பை தொடரில் 34 லீக் போட்டியில் இந்திய அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி மோதுகிறது. இந்த போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தை நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

முதலில் களமிறங்கிய இந்திய தொடக்க அணியின் வீரர்களான  ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் களமிறங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 1 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரி என 18 ரன்கள் அடித்து கெமர் ரோச் வீசிய பந்தில் விக்கெட் இழந்தார். இதன் பின் கே.எல் ராகுல் மற்றும் விராட் கோலி சிறப்பாக விளையாடி தொடங்கினர். இதில் கே.எல் ராகுல் 48 மற்றும் விராட் கோலி 72 ரன்கள் குவித்ததனர்.

இதன் பின் விஜய் சங்கர் (17), கேதர் ஜாதவ் (7), ஹர்திக் பாண்டியா (46), ஷமி (0), குல்திப் யாதவ் (0), தோனி (56) ரன்கள் குவித்துள்ளனர். 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 268 ரன்கள் குவித்தனர். இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சார்ந்த ஜேசன் ஹோல்டர் மற்றும் ஷெல்டன் கோட்ரெல் தலா 2 விக்கெட்களையும் கெமர் ரோச் 3 விக்கெட்களையும் பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here