சர்வதேச டி20 போட்டியில் அதிக முறை இலக்கை துரத்திச்சென்று வெற்றி பெற்றதில் இந்திய அணி புதிய சாதனை படைத்திருக்கிறது.

வங்கதேச அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் இந்த சாதனையை படைத்திருக்கிறது. இதுவரை 61 முறை இரண்டாவது இன்னிங்சில் ஆடிய இந்திய அணி 41 முறை வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய அணி 40 முறை இலக்கைத் துரத்தி வென்றுள்ளது. 36 வெற்றியுடன் பாகிஸ்தான் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.

அதிகமுறை இடக்கை துரத்தி வென்ற அணியின் பட்டியல்:

41 வெற்றிகள் – இந்தியா  (61 போட்டிகள்)
40 வெற்றிகள் – ஆஸ்திரேலியா (69)
36 வெற்றிகள் – பாகிஸ்தான் (67)
28 வெற்றிகள் – தென் ஆப்பிரிக்கா (48)
28 வெற்றிகள் – இங்கிலாந்து (59)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here