இன்றைய அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசீலாந்து அணிகள் மோதுகிறது. இந்த போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசீலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிஙை தேர்வு செய்தார். நியூஸிலாந்து அணி  46.1 ஓவரில்  211 ரன்கள் அடித்து 5 விக்கெட்டை பறிகொடுத்து விளையாடி கொண்டு இருந்த  போது மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

நேற்று முழுவது மழை நிற்காமல் தொடர்ந்து பெய்துக் கொண்டிருந்ததால் நேற்றைய அரையிறுதி போட்டியை ‘ ரிசர்வ் டே’ என்ற முறைப்படி போட்டியை இன்று 10.30 மணி (இந்திய நேரப்படி) அளவில் தொடங்கவுள்ளது. அதாவது நேற்று 46.1 ஓவரில் போட்டி நிறுத்தப்பட்டதால் இன்று 46.2வது ஓவரில் இருந்து போட்டி தொடங்கும். இன்றும் மழை குறிக்கிட்டால் புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி தான் இறுதி போட்டிக்கு முன்னேறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here