வெஸ்ட் இண்டீஸ்  மற்றும் இந்தியா பெண்கள் அணிகள் மோதிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியது.

இதில், முதல் ஒருநாள் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது. 2-வது போட்டியை இந்திய பெண்கள் வென்றது. இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 194 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் டெய்லர் 79 ரன்கள் அடித்தார். மற்ற வீரராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு
ரோட்ரிக்ஸ், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். நிதானமாக ஆடிய துவக்க ஜோடி ரோட்ரிக்ஸ் 69 ரன்னிலும், மந்தனா 74 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில், இந்தியா 42.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்து, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here